மனிதனின் மறுபக்கம்!


கடலென்றேன் உன்னை;
ஆழமறிய முடியாமல்!
காற்றென்றேன் உன்னை;
கடும் போக்கு உணராமல்!

வானென்றேன் உன்னை;
எண்ணம் போல்
வண்ணம் மாறும்
திரையென்று தெரியாமல்!

மானென்றேன் உன்னை;
மயக்கும் விழியை
மறக்க இயலாமல்!

நிலமகளென்றேன் உன்னை;
நிலைகொண்டுள்ள
பூகம்பம் உணராமல்!

மழையென்றேன் உன்னை;
விளையும் அனர்த்தம்
நினையாமல்!

தேனென்றேன் உன்னை;
எட்டாத தூரத்தை எண்ணாமல்!

மலரென்றேன் உன்னை;
மணம் தருவாயென்று!
மயிலென்றேன் உன்னை;
மனத்தோகை விரிப்பாயென்று!

நிலவென்றேன் உன்னை;
‘நீல் ஆம்ஸ்ரோங்
நீயில்லை’ என்றாயே!

காதலுக்கும் தினமுண்டு
கலந்து கொள்ளும்
மனமுண்டா என்றேன்;

மணம் கொள்ள
பணம் கேட்கும்
இதயமில்லா காதலுக்கு
எதற்கு நினைவுதினம் என்றாயே!

மனிதனின் மறுபக்கம்! கடலென்றேன் உன்னை; ஆழமறிய முடியாமல்! காற்றென்றேன் உன்னை; கடும் போக்கு உணராமல்! வானென்றேன் உன்னை; எண்ணம் போல் வண்ணம் மாறும் திரையென்று தெரியாமல்! மானென்றேன் உன்னை; மயக்கும் விழியை மறக்க இயலாமல்! நிலமகளென்றேன் உன்னை; நிலைகொண்டுள்ள பூகம்பம் உணராமல்! மழையென்றேன் உன்னை; விளையும் அனர்த்தம் நினையாமல்! தேனென்றேன் உன்னை; எட்டாத தூரத்தை எண்ணாமல்! மலரென்றேன் உன்னை; மணம் தருவாயென்று! மயிலென்றேன் உன்னை; மனத்தோகை விரிப்பாயென்று! நிலவென்றேன் உன்னை; 'நீல் ஆம்ஸ்ரோங் நீயில்லை' என்றாயே! காதலுக்கும் தினமுண்டு கலந்து கொள்ளும் மனமுண்டா என்றேன்; மணம் கொள்ள பணம் கேட்கும் இதயமில்லா காதலுக்கு எதற்கு நினைவுதினம் என்றாயே! ***மலர்விழித் தமிழினி

சாவி இருக்கும் வரை


ஞாபக முட்கள்
காயங்களைச் சுட்டி
வட்டமிடும்
என் ஏகாந்தத்தின்
இதயத் துடிப்பாக,
பிரிந்து சென்ற உன்
காலடி ஓசை!