மனிதனின் மறுபக்கம்!


கடலென்றேன் உன்னை;
ஆழமறிய முடியாமல்!
காற்றென்றேன் உன்னை;
கடும் போக்கு உணராமல்!

வானென்றேன் உன்னை;
எண்ணம் போல்
வண்ணம் மாறும்
திரையென்று தெரியாமல்!

மானென்றேன் உன்னை;
மயக்கும் விழியை
மறக்க இயலாமல்!

நிலமகளென்றேன் உன்னை;
நிலைகொண்டுள்ள
பூகம்பம் உணராமல்!

மழையென்றேன் உன்னை;
விளையும் அனர்த்தம்
நினையாமல்!

தேனென்றேன் உன்னை;
எட்டாத தூரத்தை எண்ணாமல்!

மலரென்றேன் உன்னை;
மணம் தருவாயென்று!
மயிலென்றேன் உன்னை;
மனத்தோகை விரிப்பாயென்று!

நிலவென்றேன் உன்னை;
‘நீல் ஆம்ஸ்ரோங்
நீயில்லை’ என்றாயே!

காதலுக்கும் தினமுண்டு
கலந்து கொள்ளும்
மனமுண்டா என்றேன்;

மணம் கொள்ள
பணம் கேட்கும்
இதயமில்லா காதலுக்கு
எதற்கு நினைவுதினம் என்றாயே!

மனிதனின் மறுபக்கம்! கடலென்றேன் உன்னை; ஆழமறிய முடியாமல்! காற்றென்றேன் உன்னை; கடும் போக்கு உணராமல்! வானென்றேன் உன்னை; எண்ணம் போல் வண்ணம் மாறும் திரையென்று தெரியாமல்! மானென்றேன் உன்னை; மயக்கும் விழியை மறக்க இயலாமல்! நிலமகளென்றேன் உன்னை; நிலைகொண்டுள்ள பூகம்பம் உணராமல்! மழையென்றேன் உன்னை; விளையும் அனர்த்தம் நினையாமல்! தேனென்றேன் உன்னை; எட்டாத தூரத்தை எண்ணாமல்! மலரென்றேன் உன்னை; மணம் தருவாயென்று! மயிலென்றேன் உன்னை; மனத்தோகை விரிப்பாயென்று! நிலவென்றேன் உன்னை; 'நீல் ஆம்ஸ்ரோங் நீயில்லை' என்றாயே! காதலுக்கும் தினமுண்டு கலந்து கொள்ளும் மனமுண்டா என்றேன்; மணம் கொள்ள பணம் கேட்கும் இதயமில்லா காதலுக்கு எதற்கு நினைவுதினம் என்றாயே! ***மலர்விழித் தமிழினி

Advertisements

சாவி இருக்கும் வரை


ஞாபக முட்கள்
காயங்களைச் சுட்டி
வட்டமிடும்
என் ஏகாந்தத்தின்
இதயத் துடிப்பாக,
பிரிந்து சென்ற உன்
காலடி ஓசை!

கவிதை – காதல் தேசம்


நான் படித்த மிகச் சிறந்த கவிதை உன் பெயர்தான்
நான் பார்த்த மிகச் சிறந்த ஓவியம் உன் முகம்தான்
அழகான பொருட்கள் எல்லாம் உன்னை நினைவுப் படுத்துகின்றன
உன்னை நினைவுப் படுத்துகின்ற எல்லாமே அழகாதான் இருக்கின்றன
உன் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை

ஒரு வயலின் இருந்தால் கொடுங்கள் வாசித்துக் காட்டுகிறேன்…

– காதல் தேசம்

காத்திருப்பேன் உனக்காக…!


நீவித் தலைவாரி நிறுத்திப் பொட்டுமிட்டு
தேவி நீ தந்த தெய்வீக தரிசனத்தால்
காவியங்கள் பலபாடி காதல் மணங்கொண்டு
காலமெல்லாம் காத்திருப்பேன் காதலியே உனக்காக…!

மடையார் குவளையென மதிமுகம் பாராது
இடையோர் இல்லையென எடுத்தடி வைத்தவளே
கடைவிழி வில்லாலே நீ தொடுத்த வினாவிற்கு
விடை கிடைக்கும் நாள்வரையில் காத்திருப்பேன் உனக்காக…!

பள்ளி நீ செல்லும் பாதையில் விழிவைத்து
கள்ளி உனைக்காண காத்திருப்பேன் நானுந்தான்
நாளும் நீ தந்த நல்ல பல சுகம் நினைத்து
மாளும் நாள்வரையில் காத்திருப்பேன் உனக்காக…!

– இராஜ.வைத்தி.

ஒரு காதலனின் கடைசி கவிதை


முள் இல்லாத ரோஜாவை
தூவுங்கள் – என்
மரண ஊர்வலத்தில்
வந்தாலும் வருவாள் – என் காதலி….
பாவம் அவளின் பாதங்கள்..!

காதல்…!


சில பூக்கள் என் மேல்
விழுந்தன…
சில பூக்கள் அவள் மேல்
விழுந்தன…
சிறு வேறுபாடு தான்..
நான் கல்லறையில்..!
அவள் மணவறையில்..!

– கவிஞர் மு.மேத்தா