அணைத்த காதலி


பெண்களுக்கு ஆண்களின் இதயம் ஒரு விளையாட்டுப் பொம்மை.

இதயத்தோடு விளையாடுவது அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

இந்த இதயம் தங்களுக்காக ஏங்கித் தவிப்பதை, ஆசையில் துடிப்பதைக் காண்பதில் அவர்களுக்கு தனி மகிழ்ச்சி.

பொம்மை உடைத்தால் குழந்தை அழும்.

ஆனால் தங்களுக்கு விளையாடக் கிடைத்த இதயம் உடைவதில் கூடக் குரூர மகிழ்ச்சி அடைவார்கள் பெண்கள்.

பெரும்பாலும் அந்த இதயத்தை போட்டு உடைப்பவர்களும் அவர்கலாகவே இருப்பார்கள்.

இதயங்கள் அரியாசனத்தில் வீற்றிருக்கும் தங்கள் அழகுக்குச் செலுத்தப்படும் கப்பமாக அவர்கள் நினைக்கிறார்கள்.

அவனுடைய காதலியும் அப்படித்தான்.

அவள் இரவில் அவணைச் சந்திக்க வருவதாக சொன்னாள்.

அவனும் ஆசையோடு காத்திருந்தான்.

நெடு நேரமாகியும் அவள் வரவில்லை.

அவன் வேதனையில் எரிந்தான்.

இரவில் எரியும் விளக்கு நாலாபுறமும் பார்த்தபடி யாருக்கோ காத்திருப்பது போலத்தான் தோன்றுகிறது.

அவனும் அவளுக்காக ஒரு விளக்கைப் போலவே எரிந்தபடி காத்திருந்தான்.

அவள் வேண்டுமென்றே தாமதமாக வந்தாள்.

வந்தவள் அவனுடைய ஆசை தீர அருகில் அமர்ந்து ஆர அமர பேசவில்லை.

வந்த வேகத்தில் புறப்பட்டுவிட்டாள்.

அவன் தன்னை அணைப்பாள் என்று ஆசையோடு எதிர்பார்த்தான்.

அவள் அணைத்தாள் அவனை அல்ல அவன் ஆசைகளை.

அவள் எப்படி வந்தாள்? எப்படி போனால்? காதலின் கதி என்ன?

கவிஞர் அஹமந் நதீம் காஸ்மி கூறுகாறார்.

யாருக்காக நான்
ஒரு விளக்கைப் போல்
காத்திருதேன்
அவள் வந்தாள்
சென்றாள்
ஒரு சூறாவளிப் போல்..!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s